சோதனைகளை வென்று சாதனைகள் படைத்து முன்னேறுங்கள்; இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
சென்னை: ''இளைஞர்கள் சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்'' என முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்; புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது.
சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்; உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்; கனவுகள் நனவாகட்டும்; சாதனைகள் தொடரட்டும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (2)
Perumal Pillai - Perth,இந்தியா
12 ஆக்,2026 - 15:54 Report Abuse
முதலாவது மந்திரிகளை தமிழ் படிக்க வையுங்கள். 0
0
Reply
Mohan - COIMBATORE,இந்தியா
12 ஆக்,2026 - 15:40 Report Abuse
ம்க்கும் ...எல்லா சாதனையும் செய்யுங்க ஆனா தப்பிதவிறி கூட NEET மட்டும் எழுதீராதீங்க அது நமக்கு தீண்டத்தகாத பரீட்சை ...அப்பறோம் படிக்காதீங்க reels மட்டும் போடுங்க ...நல்ல அறிவுரை 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement