மஞ்சக்கொல்லை அரசுப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு போட்டி    

புவனகிரி: மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

மாவட்டக் கல்வித்துறையின் ஆலோசனையின் பேரில், புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லை அரசு மேல் நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, பல்வேறு விளையாட்டுப்போட்டடிகள் நடத்தப்பட்டது. அதில், மாற்றுத்திறன் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் ரவி வழங்கி பாராட்டினார். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி உள்ளிட்ட ஆசிரியர்குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement