பைக் மோதி முதியவர் பலி

பெண்ணாடம்:மொபட்டில் சென்ற முதியவர் பைக் மோதி இறந்தார்.

பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி, மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் பெரியசாமி, 55. இவர் கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து மொபட்டில் திட்டக்குடிக்கு புறப்பட்டார். வீட்டில் இருந்து விருத்தாசலம் - திட்டக்குடி சாலையை கடக்க முயன்றபோது, விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற பைக் மோதியது. அதில், படுகாயமடைந்த பெரியசாமியை, மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று விடியற்காலை இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி செல்லம்மாள் அளித்த புகாரின் பேரில் , பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement