எல்லாவற்றையும் விவாதிக்க நான் தயார்; எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷா காலக்கெடு
புதுடில்லி: பார்லிமென்டின் செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் இடையூறு செய்வதாகக் கண்டித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''நீட் பிரச்னைக்குத் தீர்வு காணவும், எம்பிக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் அரசு தயாராக இருக்கிறது '' என்றார்.
பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் அமித்ஷா கூறியதாவது: பார்லிமென்டின் செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் இடையூறு செய்து வருகின்றன. நீட் பிரச்னைக்குத் தீர்வு காணவும், எம்பிக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் அரசு தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சி எம்பிக்கள் பார்லிமென்டின் இரு அவைகளிலும் செயல்பட அனுமதிக்கவில்லை. எனவே, அவை நடவடிக்கைகள் நடைபெற அனுமதிக்கப்படாதபோது, யார் உள்ளே சென்று என்ன பயன்?
அவையில் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன் என்பதை என் தரப்பிலிருந்தும் தெளிவுபடுத்தியுள்ளேன். ஆனால், அவர்கள் அந்த விவாதம் நடை பெறுவதை விரும்பவில்லை; நீங்கள் ஏன் விவாதத்தை விரும்பவில்லை என்பது குறித்தும் நான் விவாதிப்பேன். பாஜவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பிரதமர் மோடி தலைமையில் எல்லாவற்றையும் விவாதிக்க தயாராக உள்ளது. பார்லிமென்ட் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.
காலக்கெடு
உண்மையில் விவாதத்தைத் தவிர்ப்பது யார் என்பதை நிரூபிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் இன்று மதியம் 3 மணிக்குள் சபாநாயகரிடம் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். இன்று மதியம் 3 மணி முதல் நாளை மதியம் 3 மணி வரை அனைத்து விதமான விவாதங்களுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நான் அவையில் இருப்பேன், அனைவரின் கருத்துக்களையும் கேட்பேன், ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிப்பேன். அரசு ஓடி மறைவதற்கு ஏதும் இல்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
விருப்பமில்லை!
இது குறித்து காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களுக்குப் பாடம் எடுப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை என்பதை எதிர்க்கட்சிகள் தெளிவாகக் கூறியுள்ளன. மாணவர்களைச் சுட்டது யார்? ஆணிகள் பொருத்தப்பட்ட தடிகளால் மாணவர்களைத் தாக்க உத்தரவிட்டது யார்?
எங்கள் குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அமித் ஷா உத்தரவிட்டாரா? இது குறித்து இந்நாட்டின் இளம் தலைமுறையினர் அறிய விரும்புகின்றனர். அவர் அவ்வாறு செய்திருந்தால், அவர் பதவி விலக வேண்டும். கடந்த 20 நாட்களாக அமித் ஷாவைக் காணவில்லை. இந்தியாவின் உள்துறை அமைச்சருக்குத் துணிச்சல் இல்லை; அவரால் அவைக்கு வர முடியவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.
ராகுல்.... ஜார்க்கண்ட்ல உன்னை கூப்பிடறாங்க.......
.... என்ன சொன்னாலும் புரியாது....... தெரிஞ்சதெல்லாம்.....மோடி......மோடி......
மோடி இருக்கிற வரைக்கும் தான் உனக்கு மரியாதை......அடுத்து வருபவர்கள் .. .. இவரை விட டெர்ராகதான் இருப்பார்கள்......
கார்கே சார்....எடுத்து சொல்லுங்க சார்.....
கலாட்டா பண்ணுபவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேற MP களை தேர்ந்துஎடுக்கலாம் .
இந்த ராகுலுக்கு தேச, சமூக மற்றும் ஹிந்து விரோதிகள் பாடம் எடுத்தால் தான் பிடிக்கும். நம் நாட்டின் எதிர்க்கட்சி தலைவனாக இருப்பது நம் நாட்டின் சாபக்கேடு.
கொடிய ரவடிகளை, கிரிமினல்களை போராட்டத்தில் ஊடுருவ செய்தது யார்? போராடிய மாணவர்கள் என்று ராகுல் உறுதியாக கூற முன் வந்தால், மாணவர்கள் போலீஸ், பொது சொத்துகளை தாக்க, அழிக்க மாட்டார்கள். முக்கிய இடத்தில் கலவரம், வன்முறை நிகழ்ந்ததால், மாணவர்களை வன்முறையாளர்கள் என்று காங்கிரஸ் கூற முன் வருகிறதா? முதலில் கல்வி அமைச்சர் தற்போது உள்துறை அமைச்சர் இனி பிரதமர்? காங்கிரஸ் விவாதிக்காது. மக்கள் தேர்தலில் யாரை தேர்ந்து எடுக்க கூடாது என்று முடிவு செய்து வாக்களிக்க வேண்டும்.
முதலில் ராகுல் அவரது கட்சிக் கூட்டணி ஆளும் ஜார்க்கண்ட்டுக்கு சென்று அங்கு போராட்டத்தில் போலீஸ் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பதில் கூறட்டும். அங்கு தேர்வு முறைகேடு நடந்ததற்கு பொறுப்பு ஏற்கட்டும்
ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் தன்னை ஒரு .... என்று நிரூபித்து கொண்டே இருக்கிறார் என்று அனைத்து மக்களுக்கும் தெரிகிறது
கழுதை முன்னாள் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்கும்.. அதுபோலத்தான் இந்தியாவில் இப்போது உள்ள எதிர்க்கட்சிகள்.
சட்டசபைகளும் சரி பாராளுமன்றத்திலும் சரி இந்த கேடுகெட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் வெளிநடப்பு செய்து மக்களின் வரிப்பணத்தை அநியாயமாக வீணாக்குகிறார்கள் சட்டசபையும் பாராளுமன்றமும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விவாதித்து ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு சிறந்த முடிவை காண்பதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது ஆனால் இந்த கடமையில் துளி கூட அக்கறை இல்லாமல் உணவகத்தில் போய் வயிறு புடைக்க தின்றுவிட்டு ஓடிப் போவது எந்த விதத்தில் நியாயம் இவர்களை தண்டிப்பதற்கு அரசியல் சாசனத்தில் எந்த ஒரு சட்டமும் இல்லையா அல்லது பயன்படுத்தப்படுவது இல்லையா என்பதை சட்டம் படித்தவர்கள் தயவுசெய்து எங்களைப் போன்ற சட்டத்துறை அல்லாத வெவ்வேறான துறைகளில் இருப்பவர்களுக்கு முதலில் தெளிவுபடுத்துங்கள்