காஞ்சிபுரம் மாவட்டம் இனிதாக

பால் அபிஷேகம் * தன்வந்திரி பாபாவுக்கு பால் அபிஷேக அலங்காரம் மற்றும் ஆரத்தி, குபேர விநாயகர் கோவில், பேராசிரியர் நகர் பகுதி - 2, ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பஜனை, இரவு 7:00 மணி; ஆரத்தி, இரவு 7:30 மணி; அன்னதானம், இரவு 8:00 மணி.

மண்டலாபிஷேகம் * கிராம தேவதை திருவாத்தி அம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

*அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில், வடதிருக்கடவூர், நாயகன்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

ஆடிப்பூரம்

* ஆண்டாள் திருவடிகோவில் புறப்பாடு, வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், மாலை 5:30 மணி; ஊஞ்சல் சேவை, மாலை 6:00 மணி.

ஆடி திருவிழா * கஜலட்சுமி அலங்காரம், அன்னை ரேணுகாம்பாள் கோவில், செங்குந்தர் பூவரசந்தோப்பு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

சொற்பொழிவு * பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, ஏற்பாடு: இந்து சமய மன்றம் மற்றும் குருவார வழிபாட்டு மன்றம், சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் அருணை பாலறாவாயன், மஹா ஸ்வாமிகள் பிருந்தாவனம், சங்கரமடம், காஞ்சிபுரம், காலை 11:00 மணி.

* தலைப்பு: நரகத்தை அடைவது குறித்து அஞ்சுகின்றேன் -- நம்மாழ்வார். சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

குருவார சிறப்பு அபிஷேகம் * சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 5:45 மணி.

* குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி * பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

சிறப்பு வழிபாடு * ஆயில்யம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

பொது திருக்குறள் பயிற்சி வகுப்பு

* பள்ளி மாணவ--மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30-7:30 மணி வரை; மாலை 5:30- 6:45 மணி வரை.

அன்னதானம் * அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.

* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

Advertisement