விருத்தாம்பிகை கோவிலில் இன்று ஆடிப்பூர தேரோட்டம்
விருத்தாசலம்: விருத்தாம்பிகை அம்மனுக்கு இன்று காலை, ஆடிப்பூர தேரோட்ட உற்சவம் நடக்கிறது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம், கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.
முக்கிய நிகழ்வாக, இன்று காலை 7:30க்கு மேல், 9:00 மணிக்குள் ஆடிப்பூர தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, அம்மன் தேர் அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. நாளை 14ம் தேதி, ஸ்படிக பல்லக்கில் அம்மன் வீதியுலா, 15ம் தேதி காலை 4:30 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement