நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
திருவள்ளூர், ஆக. 13–
திருவள்ளுர் மாவட்டத்தில், வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை நடக்க உள்ளதாக கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளுர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை காலை காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, மின்வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்பாக, தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண, அந்தந்த வருவாய் கோட்டாங்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.
வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்களை மட்டும், கலெக்டர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்கள், நாளை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
-
பைக் மோதி முதியவர் பலி
-
மஞ்சக்கொல்லை அரசுப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு போட்டி
-
சோதனைகளை வென்று சாதனைகள் படைத்து முன்னேறுங்கள்; இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
-
திருப்புவனத்தில் ஆடி அமாவாசை வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்
-
பழைய தகவல்களுடன் செயல்படும் திருவள்ளூர் மாவட்ட இணையதளம் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு