இது ரீல்ஸ் காலம்; எச்சரிக்கையுடன் இருக்கும்படி இளைய தலைமுறையினருக்கு மோடி அறிவுரை

3

புதுடில்லி: ''இளைய தலை முறையினரிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்; இது ரீல்ஸ் காலம்; சமூக ஊடக பிரபலங்கள் உங்களை வேறு திசையில் ஈர்க்கக்கூடும்'' என பிரதமர் மோடி எச்சரித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை டில்லி விஞ்ஞான் பவனில் பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

அவரது சுயசரிதை இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரிய அடையாளமாக மாறும். வரும் தலைமுறையினர் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன. இளைய தலை முறையினரிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.


வாசகம் சொன்ன பிரதமர்




இது ரீல்ஸ் காலம்; சமூக ஊடக பிரபலங்கள் உங்களை வேறு திசையில் ஈர்க்கக்கூடும். குறுக்கு வழியை தேடி போகும் இந்த காலகட்டத்தில் ரயில்நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

குறுக்குவழிகள் உங்கள் வாழ்வை குறுக்கிவிடும். இளைஞர்களே நீங்கள் ஒரு குறுக்குவழியைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் உங்களுக்கு பிடித்தமானவர்களின் சுயசரிதையை படியுங்கள். சுயசரிதைகளைப் படித்து மற்றவர்களின் போராட்டங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.


சவால்கள்




ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னரும் கோவிந்த் ஓய்வெடுக்கவில்லை; இந்திய ஜனநாயகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும், ''ஒரே நாடு; ஒரே தேர்தல்'' என்ற திட்டத்திற்காக பணியாற்றி வருகிறார். இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அவர் தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வருகிறார்.

அவரது சுயசரிதையை இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் கோவிந்தைப் போன்ற இன்னும் பல இளைஞர்கள் நமக்குத் தேவை; சூழ்நிலைகளால் துவண்டு போகாமல், ஒவ்வொரு சவாலையும் வெல்லும் உறுதியைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


ரீல்ஸ் வீடியோ பாருங்கள்!

ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்ட பிரதமர்; இளைஞர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகள்

தினமலர் ரீல்ஸ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement