தனித்திறன் போட்டிகளுக்கு மாணவர்கள் தேர்வு தீவிரம்

விருத்தாசலம்: கல்வி மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகளுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்தது.

விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள், இருப்புக்குறிச்சி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்காக, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை தேர்வு செய்யும் பணி நடந்தது.

அதன்படி, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், 100, 200, 400, 600, 1,500 மற்றும் 3,000 மீட்டர் தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை தேர்வு செய்யும் பணி நடந்தது.

தலைமை ஆசிரியர் வினோத்குமார் முன்னிலையில் உடற்கல்வி ஆசிரியர் பிரகாசம் மாணவர்களை தேர்வு செய்தார்.

Advertisement