ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

கடலுார், ஆக. 13–

கடலுாரில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் விளக்க உரையாற்றினார். துணைத் தலைவர்கள் ஜெகரட்சகன், நல்லதம்பி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கிளை தலைவர் அந்தோணிசாமி, செயலாளர் ஆறுமுகம், அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு நுண்கதிர் தொழில்நுட்ப பணியாளர் சங்க மாநில தலைவர் சுந்தர்ராஜா, குணசேகரன் வாழ்த்தி பேசினர். தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தி்ல் வலியுறுத்தப்பட்டது. பிரசார செயலாளர் சிங்காரம் நன்றி கூறினார்.

Advertisement