ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கடலுாரில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட தலைவர்கள் பற்றிய கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடந்தது.
இப்போட்டியில் கடலுாரில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் 15 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவில், சங்க பொருளாளர் நரசிம்மன் வரவேற்றார். சங்க மாநில தலைவர் திருமலை தலைமை தாங்கி, போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. சங்க உறுப்பினர் கோதண்டராமன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement