ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை: பொதுமேலாளர் விளக்கம்
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் ஆவின் பூத்களில் ரூ.10 பால், தயிர் கிடைப்பதில்லை; தட்டுப்பாடு நிலவுகிறது; மாறாக அரை லிட்டர் பாக்கெட்டுகள் வாங்க நுகர்வோர்கள் நிர்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாவட்ட ஆவின் பொது மேலாளர் வானீஸ்வரி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஆவின் நிர்வாகத்தை பொறுத்தவரை முகவர்கள், விற்பனையாளர்கள் இணைய வழியில் பதிவு செய்யும் தேவையின் அடிப்படையில் பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
200 மி.லி., அரை லிட்டர், ஒரு லிட்டர் என அவர்கள் என்ன தேவையை குறிப்பிடுகிறார்களோ அதை தான் நாங்கள் அனுப்பி வைக்கிறோம். எந்தவொரு தயாரிப்பையும் கட்டாயப்படுத்தி திணிப்பது இல்லை.சிட்கோ உள்பட இரண்டு இடங்களில் செயல்படும் ஆவின் உற்பத்தி ஆலை மூலம் தினசரி 33 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியில் உள்ள முகவர் தேவையை குறைவாக பதிவு செய்திருக்கலாம் அல்லது அன்றைய தினம் விற்பனை அதிகமாகி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம்.
இருப்பினும், ஆவின் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பிரச்னை சரி செய்யப்படும்.தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்வதால் ஆவினுக்கான பால் கொள்முதல் சற்று குறைந்துள்ளது. இதனால் உள்ளூர் தேவை, விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. கொள்முதலை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் சீர் செய்யப்படும் என்றார்.
மேலும்
-
குத்துச்சண்டையின் போது விபரீதம்; 11 ஆண்டு கால சிகிச்சைக்குப் பிறகு 33 வயது வீரர் மரணம்
-
12.5% சுங்க வரிகளிலிருந்து விலக்கு; ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை பரிசீலிக்க டிரம்ப் சம்மதம்
-
மலை தேனீக்கள் அகற்றம் நிம்மதியடைந்த மக்கள்
-
டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை
-
போலீசாருக்கு இன்று ஒரு நாள் பயிற்சி முகாம்
-
கரூரில் கட்டட பொருட்கள் கண்காட்சி தொடக்கம்