மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த சதிஷ்குமார் மனைவி பவானி. இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்துள்ளது.
இதற்கிடையே சதிஷ்குமாருக்கு குடி பழக்கம் அதிகம் இருந்ததால், கடந்த 6 மாதத்திற்கு முன், கடலுார் மாவட்டம், பெரியகண்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பவானி சென்றுவிட்டார்.
இந்நிலையில், விழுப்புரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு, உறவினர் நிகழ்ச்சிக்கு பவானி வந்துள்ளார். அப்போது, சதிஷ்குமாரை சந்தித்து பவானி பேசியுள்ளார். தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த சதிஷ்குமார், அவரது உறவினர்கள் சந்தோஷ்குமார், புவனேஸ்வரி ஆகியோர் சேர்ந்து பவானியை திட்டி, தாக்கியுள்ளனர்.
இது குறித்து சதிஷ்குமார் உட்பட 3 பேர் மீது, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.