ஓடி ஒளியும் எதிர்க்கட்சிகள்; மத்திய அரசு குற்றச்சாட்டு
புதுடில்லி: பார்லிமெண்ட் விவாதங்களில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் விலகி ஓடுவது விரக்தியை தருகிறது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார்.
பார்லி. வளாகத்தில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது;
பார்லி.யில் அரசாங்கம் ஒரு விவாதத்தை விரும்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதில் இருந்து விலகி ஓடும் சூழல் காணப்படுகிறது. மிகுந்த விரக்தியை தருகிறது. பார்லிமெண்ட் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் தான் விவாதத்தை கோரும். ஆளும் அரசாங்கம் அதற்குரிய பதில்களை வழங்கும்.
என் வாழ்வில் முதன்முறையாக ஒரு அரசு விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளோ அதில் இருந்து ஓடி ஒளிகிறது. அரசு சொல்வதை கேட்க மறுக்கிறது. இப்படியான ஒரு சூழலை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
பலமுறை விவாதிக்க கோரியும் எதிர்க்கட்சிகள் அதை ஏற்க மறுப்பது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. இன்றும் கூட விவாதத்தை உடனே தொடங்குமாறு எதிர்க்கட்சிகளை நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அவர்களிடம் அதற்கான தைரியம் இல்லை. இது நாட்டுக்கும் நல்லதல்ல.
விவாதம் இல்லை என்றால் ஒரு பார்லிமெண்ட் எவ்வாறு இயங்க முடியும்? எதிர்க்கட்சிகள் எதையுமே செவி சாய்க்கவில்லை, ஒரு அரசானது தனது கருத்துளை பார்லி.யில் முன் வைக்கவோ அல்லது அதற்கு பதிலளிக்கவோ முடியாது.
பதாகைகளை ஏந்துவது, முழக்கமிடுவது, திட்டுவது இப்போது காங்கிரசின் இயல்பாகிவிட்டது. மக்களை திட்டுவது தான் ஒரே வேலை என்று காங். எம்பிக்கள் நினைக்கின்றனர்.
நாளை (ஆக.13) கூட்டத்தொடரின் கடைசி நாள். இன்றும் நாங்கள் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.
விவாதம் ?? அப்படீன்னா என்ன மந்திரிசார்?
இன்றைய தினத்தில் உங்கள் கட்சி பிஜேபி ஐ தவிர வேறு எந்த கட்சியிலும் கலந்தாலோசித்து, விவாதித்து முடிவெடுக்கும் சுதந்திரம் இல்லை சார்.
பிஜேபி யைத்தவிர எல்லா கட்சிகளும் PETTY SHOP தான். குடும்பத்தலைவன் தான் முடிவெடுப்பார், கல்லாவில் உட்காருவார்.
ன்
விவாதம் செய்ய நல்ல மூளையும் தேவை. SUBJECT OF DISCUSSION ஐ நன்கு நன்கு ஆராயும் பொறுமையும் தேவை.
இவை இரண்டும் இருப்பவர் - நிச்சயம் - இன்றைய எதிர்கட்சியில் இருக்கமாட்டார்
எதிர் கருத்து கூற பதில் இல்லை பப்பு கானிடம். அதான் பயந்து ஓடி ஒளிந்து கொண்டான்
ஒடி ஒளிவது தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமானம்...