வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு; உச்சநீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு

16

புதுடில்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆமதாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் மேல்முறையீடு செய்துள்ளார்.


வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ராகுல் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு ஆமதாபாத் உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தெளிவான பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஆமதாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வரும் 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Advertisement