டாஸ்மாக் லாரி கவிழ்ந்தது

1


விருதுநகர்: மது பாட்டில்கள் லோடு ஏற்றிய லாரி, விருதுநகரில் கவிழ்ந்தது.
வந்தவாசியை சேர்ந்த டிரைவர் வரதராஜன் 52, சென்னையில் இருந்து 1650 பெட்டிகளில் டாஸ்மாக் லோடு ஏற்றிய லாரியை திருநெல்வேலிக்கு ஓட்டிச் சென்றார்.

விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரி அருகே நான்கு வழிச்சாலையில் சென்ற போது ரோட்டை கடக்க முயன்ற ஆட்டுமந்தை கூட்டத்திற்காக லாரியை நிறுத்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் லாரியில் இருந்த அனைத்து டாஸ்மாக் பாட்டில்களும் பள்ளத்தில் பெட்டியுடன் விழுந்து உடைந்து சிதறின.

மதுபாட்டில்களை யாரும் எடுத்துச் செல்லாமல் இருப்பதற்காக, விபத்து நடந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Advertisement