மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம்: வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ், 125 நாட்கள் வேலை வழங்கக்கோாரி, கோலியனுார் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அடுத்த கோலியனுார் பி.டி.ஓ., அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

கோலியனுார் ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினர். இதில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ், 125 நாட்கள் வேலை வழங்கக்கோாரி கோஷங்கள் எழுப்பினர்.

தகவலறிந்த பி.டி.ஓ., நாராயணன் மற்றும் வளவனுார் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு வரும், 20ம் தேதி முதல் 125 நாட்கள் வேலை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.

Advertisement