2 மாவட்டங்களில் கனமழை; 5 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் லேசான மழை பதிவாகி உள்ளது. காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது.அதிகபட்சமாக, தர்மபுரி பிடிஓவில் 7.1 செமீ., மழை பதிவாகி உள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இன்று( ஆக.,13)
நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
ஆக.,14
நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதரபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.