மஹாராஷ்டிராவில் அகாலிதளம் கட்சித் தலைவர் மீது தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் நன்டட் பகுதியில் சிரோன்மணி அகாலிதளம் கட்சித் தலைவர் சுக்பிர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சிரோன்மணி அகாலிதளம் கட்சித் தலைவரும், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான சுக்பிர் சிங் பாதல், குடும்பத்துடன், மஹாராஷ்டிரா மாநிலம் நன்டட் பகுதியில் உள்ள குருத்வாராவிற்கு வந்தார். அங்கு பிற்பகல் 1:45மணியளவில் சுக்பிர் சிங் பாதல் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது.
கையில் காயம் அடைந்த சுக்பிர் சிங் பாதல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கையில் லேசான காயம் ஏற்பட்டது.தாக்குதல் நடத்திய நிஹாங் ஜஸ்பால் சிங் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி நடந்த கொலை முயற்சி சம்பவத்தில் சுக்பிர் சிங் பாதல் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்கு உத்தரவு
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சுக்பிர் சிங் பாதல் உடன் தொலைபேசியில் பேசிய மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் நலம் விசாரித்தார். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டு உள்ளார்.