டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

கரூர்:டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள், அனைத்து பார்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. இவைகளை முழுமையாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக மதுபானம் விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement