எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு
பெண்ணாடம், ஆக. 15–
ஆடிப்பூரத்தையொட்டி, பெண்ணாடம் எல்லையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெண்ணாடம், கிழக்கு வாள்பட்டறை எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி இன்று காலை அம்மனுக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு வளையல் அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. பிரசாதமாக வழங்கப்பட்ட வளையல்களை பெண்கள் அணிந்து, அம்மனை தரிசனம் செய்தனர்.
இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல், முக்குளம் பிடாரி செல்லியம்மன், பிரளயகாலேஸ்வரர் கோவில், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி ஆகிய கோவில்களில் ஆடிப்பூரம் சிறப்பு வழிபாடு நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement