பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நடந்தது.
கடலுார் பெரிய நாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை, மாலை சுவாமி மாட வீதியுலா நடந்தது. நேற்று காலை பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
உற்சவர் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வளையல், வஸ்திரங்கள் சாற்றி கொலு மண்டபத்தில் வைத்து தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, அம்மனுக்கு திருமாங்கல்யம், வளையல்கள் சாற்றி தீபாராதனை நடந்தது. அம்மனை சிவகர தீர்த்த குளத்திற்கு எழுந்தருள செய்து, தீர்த்தவாரி நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போன்று, புதுப்பாளையம் பகவந்தர் சுவாமி மடத்திலும் ஆடிப்பூர உற்சவம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
-
ஆடிப்பூரம் / திருவிளக்கு வழிபாடு
-
பள்ளிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள்; அரசு பதிலளிக்க ஐகோர்ட் அவகாசம்
-
திருட்டு சம்பவங்கள் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பாலப்பன்பட்டி மக்கள் வலியுறுத்தல்
-
அரசு களப்பணியாளருக்குப் பாராட்டுச்சான்றிதழ்
-
வலிமை பெற்ற வளை கரங்கள் ஜூடோவில் மாணவியர் அசத்தல்
Advertisement
Advertisement