போதை ஒழிப்பு விழிப்புணர்வு

கம்பம் ஆக 15

சுதந்திர தினத்தை முன்னிட்டு கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாணவ மாணவிகள் பங்கேற்ற ஊர்வலத்தை பள்ளியில் தாளாளர் காந்த வாசன் துவக்கி வைத்தார். இணை செயலாளர் சுகன்யா முன்னிலை வகித்தார். முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். துணை முதல்வர்கள் லோகநாதன் சரவணன் யோகா ஆசிரியர் துரை ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் நிறைவடைந்தது.

Advertisement