முத்தாலம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை
கடலுார்: திருப்பணாம்பாக்கம் முத்தாலம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை நடந்தது.
கடலுார் அடுத்த திருப்பணாம்பாக்கத்தில் முத்தாலம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி மாத 5ம் வெள்ளியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை, சாகை வார்த்தல் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை முத்தாலம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நிறுவனர் காங்கேயன் செய்து, பக்தர்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement