முதல்வர் கோப்பை போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
செங்கல்பட்டு: மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, கலெக்டர் வீரப்பன் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், 2026 - 27ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் செப்., 4 முதல் 30ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. மாவட்டம் மற்றும் மாநில அளவில் 43 போட்டிகளும், மண்டல அளவில் 14 போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
ஆர்வமுள்ள வீரர் - வீராங்கனையர் https://cmtrophy.sdat.in மற்றும் https://sda.tn.gov.in என்ற இணைய தளங்களில் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு 74017 03461 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement