நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்., கிராம சபை கூட்டம்
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், 11 கிராம பஞ்சாயத்துகளில் இன்று கிராம சபை கூட்டம் நடக்கிறது.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செய்திக் குறிப்பு:
சுதந்திர தினத்தையொட்டி, இன்று காலை 10:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது. அதன்படி, நெட்டப்பாக்கம் - சிவன் கோவில் திடல், பண்டசோழநல்லுார் - கல்மண்டபம் சமுதாய நலக்கூடம், சூரமங்கலம் பேட் அம்பேத்கர் கலையரங்கம், ஏரிப்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளி, கரிக்கலாம்பாக்கம் ராஜிவ்காந்தி அரசு திருமண நிலையம், மடுகரை கிழக்கு சிவன் கோவில் பூங்கா, மடுகரை மேற்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி மைதனாம், செம்பியப்பாளையம் அய்யனார்கோவில் வளாகம் நத்தமேடு, கரியமாணிக்கம் விவசாயப் பண்ணை வளாகம், கோர்க்காடு அரசு தொடக்கப் பள்ளி மைதானம், ஆகிய பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது.
இதில், பொதுமக்கள், மகளிர் குழு, கிராம வளர்ச்சி சங்க உறுப்பினர்கள், இளைஞர்கள் பங்கேற்று, கிராம வளர்ச்சி திட்டத்திற்கான வரைவு அறிக்கை, தங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை எடுத்துக்கூறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.