சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து: உயர்நீதிமன்றம் உறுதி
மதுரை: உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் சுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (எம்.எம்.பி.ஏ.,) வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெசிஜீவபிரியா. இவர் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு எழுதிய கடிதம்:
தங்களின் சுற்றறிக்கையில், 'மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை, மாவட்ட நீதிமன்றங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'வந்தே மாதரம்' தேசிய பாடல் பாடப்படும் அல்லது இசைக்கப்படும். முதலில் 'வந்தே மாதரம்' பாடல், தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்படும். இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிரலில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இடம்பெறவில்லை.
உயர்நீதிமன்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நீண்டகாலமாக நிலவி வரும் மரபின்படி, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு அல்லது பாடப்பட்ட பின்னரே துவங்குவது வழக்கமாக உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ், பண்பாட்டு பெருமையின் அடையாளம். சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
எம்.எம்.பி.ஏ., தலைவர் அருள்வடிவேல் (எ)சேகர் கூறியதாவது: அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் உயர்நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை சந்தித்தோம். கோரிக்கையை வலியுறுத்தினோம். விழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என அவர் உறுதியளித்தார்.
முதல்வர் கொடியேற்றும் நிகழ்வின்போது மாநில அரசு பின்பற்றும் நடைமுறையை உறுதிப்படுத்துமாறு அரசு தலைமை வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். அதே நடைமுறை உயர்நீதிமன்றத்திலும் பின்பற்றப்படும் என நிர்வாக நீதிபதி உறுதியளித்தார். இவ்வாறு தெரிவித்தார்.
In no other state you have this nasty politics
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை
விட்டு மாநில உரிமை, தனித் தன்மை ஆ,,ஊ என்பது இங்கு புதுச் உச்சம் தொடுகிறது. இப்படி அசாமீசு தாயி, போஜ்புரி தாயி, மராட்டி தாயி, மற்றும் கொங்கணி, கோவானியன், துளு, கன்னடம், தெலுங்கு மலையாள தாயி,
காஷ்மீரி இன்னும் இருக்கும் தாயி வாழ்த்தூ மேட்டர் எல்லாம் கோர்ட் படி ஏறியிருக்குங்களா ஆபீசர்?
தமிழில் வாதாட முடியாது. தமிழில் தீர்ப்பு அளிக்கப்படாது. தமிழை வளர்க்க உதவாத வட மொழி கலந்த வாழ்த்து எதற்கு?
வந்தேமாதரம், மாநில மொழி பாடல் - தமிழ் தாய் வாழ்த்து. இறுதியில் தேசிய கீதம். தேசிய பாதையில் இருந்து பிரித்து மக்களை மாநில நிர்வாகம் குழப்ப வேண்டாம்.
யாரு யாரு கூட கூட்டணி வைத்தால் உனக்கு என்னப்பா சொன்ன வாக்குறுதிகளை நிறை வேற்றும் வழியை பார் . Dm
தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு நிகழ்ச்சிகளில் முதலாவதாகப் பாட வேண்டும் என்று தமிழ் நாட்டில் ஒரு பெரும் போராட்டமே நடக்கிறது. இந்த நேரத்தில் “பகுத்தறிவுப் பகலவன்” ?? சொன்னதை எண்ணிப்பார்க்க வேண்டும்....
“மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் தமிழ்த்தாய் உங்களைப் படித்தவளாக ஆக்கினாளா? அந்த தமிழ்த்தாய்க்கு என்று வாழ்த்து எதற்காக? நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்து விடுமா ? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால், உடனே தமிழ்த்தாய் வாழ்த்து. ஒரு முட்டாள்தனத்துக்குப் பதில் இன்னொரு முட்டாள்தனமா? ஈ.வெ.ராமசாமி “விடுதலை” இதழ் 13-04-1973
தமிழகத்தில் உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் கூட தமிழ் என்ற தொன்மையான மொழி பயிற்றுவிக்கப்படுவது கிடையாது. அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்துச்செல்வதை விட்டுவிட்டு என்னதான் பிதற்றினாலும் தமிழ் வாழாது. தமிழ் மீது ஆர்வமுள்ளோர் தனக்கிருக்கும் பிள்ளைகளில் ஒருவருக்காவது தமிழை முழுமையாக கொண்டு செல்வேன் என்று சுதந்திர தினமான இன்று பற்றுறுதி எடுத்து அதை முழுமனதுடன் செயல்படுத்த வேண்டும். மொத்தத்தில் திராவிடர்களிடமிருந்து தமிழ்த்தாய்க்கும் தமிழுக்கும் நிரந்தரமாக விடுதலை வேண்டும்.