போக்குவரத்து நெரிசலை தீர்க்க கரூரில் ஒத்திகை

கரூர்:கரூர் நகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க, நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கரூர் நகரின் மையப்பகுதியில், மனோகரா கார்னரில் இயங்கி வந்த, பஸ் ஸ்டாண்ட் திருமாநிலையூருக்கு மாற்றப்பட்டது. தற்போது, பழைய பஸ் ஸ்டாண்டுக்கு டவுன் பஸ்கள் மற்றும் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் மட்டும், பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து விட்டு, திருமாநிலையூரில் செயல்படும் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்கிறது.
ஆனால், கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இதனால், கரூர் நகரில் யு-டர்ன் என்ற அடிப்படையில், தானியங்கி சிக்னல் விளக்குகள் இல்லாமல், போக்குவரத்தை இயக்குவது குறித்து, நேற்று ஒத்திகை நடந்தது. அப்போது, கரூர் மனோகரா கார்னரில் உள்ள, தானியங்கி சிக்னல்கள் ஆப் செய்யப்பட்டு, வாகனங்கள் யு-டர்ன் முறையில் அனுப்பப்பட்டது.
ஆனால், போக்கு
வரத்து நெரிசல் குறைந்தபா டில்லை. இதனால், இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என, கரூர் நகர போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
ஒத்திகை நிகழ்ச்சியின் போது, நெடுஞ்சாலை துறை பொறியாளர் ராஜ்குமார், முன்னாள் பொறியாளர் மனுநீதி, கரூர் டவுன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகீரா பானு, எஸ்.ஐ., விஸ்வநாதன் மற்றும் போக்குவரத்து போலீசார் உடனிருந்தனர்.

Advertisement