மின்விசிறி சுழலும் விதம்
மின்விசிறி (சீலிங் பேன்) இல்லாத வீடு, அலுவலகம் இருக்க முடியாது. அமெரிக்க விஞ்ஞானி பிலிப் டைஹில், 1889ல் இதை உருவாக்கி காப்புரிமை பெற்றார். படகில் துடுப்பைத் தள்ளும்போது, நீர் பின்னே செல்வதுபோல, மின்விசிறியின் இறக்கைகள் காற்றைத் தள்ளுகின்றன.
மின்விசிறிகளின் இறக்கைகள் குறிப்பிட்ட கோணத்தில் வளைந்து இருக்கும். கடிகார எதிர்திசையில் சுழலும். சுற்றும் திசை நோக்கியுள்ள விளிம்புப்பகுதி உயர்ந்தும், பின்பகுதி தாழ்ந்தும் இருக்கும். எனவே தான் அவை சுழலும்போது, அவற்றின் பின்பகுதியில் உள்ள காற்றை உள்ளிழுத்து முன்னே தள்ளுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement