தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்ற அரசு செயல்படுகிறது; முதல்வர் விஜய் உரை
சென்னை: தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம் தான்; அதனை நோக்கி தான் நமது அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது என முதல்வர் விஜய் பேசினார்.
சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் முதன்முறையாக தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்; விழாவில் நடிகை திரிஷா, அவரது தாயார் உமா மற்றும் முதல்வர் விஜயின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக முதல்வர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.




எல்லோரும் ஒரே மாதிரி யோசித்து ஒன்று சேர ஆரம்பிப்பார்கள். அப்படி ஒன்று சேரும் இடத்தில் ஜாதி, மதம், மொழி, இனம் எல்லாம் உடைந்து நொறுங்கும். அப்படி உடைந்து நொறுங்கும் இடத்தில் கிடைப்பது தான் உண்மையான சுதந்திரம். நாம் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வந்து கொண்டு இருக்கிறோம்.
விடுதலைக்கு சமமான...
அந்த வளர்ச்சியை அடுத்தடுத்து கட்டத்துக்கு கொண்டு செல்வது நமது எல்லோருடைய கடமை. இந்த நேரத்தில் தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம் தான்; அதனை நோக்கி தான் நமது அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
386 ஆண்டு பழமையான இந்த கோட்டையில், 80வது சுதந்திர தின நாளில் நமது நாட்டின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, இந்த விழாவில் என்னை பேசவும் வைத்து இருக்கிறீர்கள். உலகம் முழுவதும் இருக்கும் என்னுடைய தமிழ் சொந்தங்களுக்கும், தமிழக மக்களுக்கும், ஜென்சி இளம்படை தோழர்களுக்கும் என்னுடைய நன்றி.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்து தான் தமிழகத்தை லஞ்சம், லாவண்யம் அற்ற , போதைப்பொருள் கலாசாரம் இல்லாத, பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி அடிப்படையில் ஒரு வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகமாக நாம் செயல்பட்டு வந்து கொண்டு இருக்கிறோம்.
சமரசம் கூடாது!
பொது வாழ்வில் சமரசம் இருக்கவே கூடாது. மக்கள் நலன் தான் மிக முக்கியமான விஷயம்; அதன் அடிப்படையில் தான் தவெக அரசு செயல்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களிலும் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்புடன் இருக்கிறோம்.
அதேநேரத்தில் தமிழக கொள்கைகள் என்று வந்துவிட்டால், மாநில உரிமைகளுக்கு எதிரான முடிவுகளிலும் சரி, தமிழகத்துக்கு எதிரான கொள்கை முடிவிலும் சரி தவெக அரசு எப்பொழுதும் எதிர்க்கும். அதில் எந்த மாற்ற கருத்தும் கிடையாது.
கடந்த கால ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களில், மக்களுக்கு பயன்படும் திட்டங்களை தொடருவோம். ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் திட்டத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம். காலை உணவு திட்டத்தையும் விரிவுபடுத்தி செயல்படுத்த இருக்கிறோம்.
3 மாதத்தில்...
நமது அரசு, உங்களுடைய அரசு வந்து 3 மாதம் ஆகிறது. இந்த 3 மாதத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. தாய்மாமன் திட்டம் துவங்கப்பட உள்ளது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
வெளிப்படையான நிர்வாகத்திற்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கணினி மயமாக்கப்பட்ட நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளது. கோவில் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு அனைவருக்கும் தெரியும் மாறு ஆன்லைனில் ஏற்றப்படுகிறது. லஞ்சம் வாங்குவதை புகார் செய்ய புதிய வாட்ஸ் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தான் ஆட்சியாளர்கள்!
மக்களே எல்லோரும் ஓட்டு போட்டு விட்டோம், வெற்றிபெற வைத்து முதல்வர் ஆக்கி விட்டோம்; உங்கள் கடமை முடிந்து விட்டது என்று யாரும் ஒதுங்கி போய் விடாதீர்கள். இனிமேல் நீங்கள் உறுதியாக நமது அரசுடன் கூடவே இருக்க வேண்டும். அப்பொழுது தான் எல்லா நல்ல திட்டங்களையும் என்னால் செயல்படுத்த முடியும்.
மக்கள் தான் ஆட்சியாளர்கள், எல்லோரும் சேர்ந்து கடைமையை செய்வோம்; அரசுக்கு எதிரான சதிகளை, சக்திகளை முறியடிப்போம். நீங்கள் எல்லோரும் நம்மோடு இருக்கும் போது என்ன கவலை. நல்லதை மட்டுமே நோக்கி நகர்வோம். நல்லதை மட்டும் நோக்கி நகரும் உங்கள் அரசு, உங்களுடைய எதிர்பார்ப்பு, கருத்துக்களை மனதில் வைத்து கொண்டு தான், நல்ல புதிய அறிவிப்புகளை அறிவிக்க இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
@block_P@
* தாய்நாட்டிற்காக தியாகம் செய்த முன்னாள் படை வீரர்களின் நலன் கருதி அவர்களது இரண்டு மகள்களுக்கும் வழங்கப்படும் திருமண நிதியுதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத நிதியுதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* மாநில அரசால் விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.23 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* வீரபாண்டியன் கட்டபொம்மன், மருது சகோதரர்களின் வழி தோன்றல்களுக்கு வழங்கப்படும் மாத சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.block_P
@block_B@
சென்னையில் கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் வீர, தீரச் செயலுக்காக போலீஸ் அதிகாரிகளுக்கு
முதல்வர் விஜய் விருது வழங்கி கவுரவித்தார். அவர் விருது பெற்றவர்களுடன் புகைப்படம் எடுத்தக்கொண்டார்.block_B
@block_G@
சுதந்திர தின விழா நிகழ்ச்சியைக் காண சாலையின் இருபுறமும் குவிந்திருந்த ஏராளமான பொதுமக்களை, நடந்து சென்று முதல்வர் விஜய் சந்தித்தார்.block_G
சிறப்பு வீடியோ!
கோட்டையில் சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் உரை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
களத்தில் தினமலர்!
எட்டு திக்கும் மூவர்ணம்; தமிழகம் முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
அதிமுக ஊழல் அமைச்சர்களை கூட விழா எடுத்து ஆர்ப்பாட்டம் பண்ணி கட்சியில் சேர்த்து விட்டு ஊழலை ஒழிப்பது நல்ல நகைச்சுவை .. காலக் கொடும
லஞ்சம் வாங்கி பிழைக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட வேண்டாம்.... ஊழல் செய்த பிற கட்சி நபர்களை எனது கட்சியில் சேர்க்க மாட்டேன் என சொல்ல முடியுமா? மாற்றம் வேண்டும் என நினைத்த மக்கள் இரண்டு கட்சிகளிடம் லஞ்சம் வாங்கி விஸ்வாசம் இல்லாமல் தங்களுக்கு போட்டவர்கள் உத்தமர்களா? தபால் ஓட்டு அதிகம் போட்ட அரசு ஊழியர்கள் கதி!
கரூர் மாவட்டம் குளித்தலையில் நான்கு வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மாணிக்கம் என்ற நபரைத் தேடிப்பிடித்த சிறுமியின் பாட்டி, நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் ...
தண்டனைகள் மிகக் கடுமையானதாக மாறாத வரையிலும் எந்த குற்றத்தையும் யாராலும் தடுத்து ஒழித்து விட முடியாது இதுவும் முந்தைய அரசுகள் கூவம் நதியை சுத்தம் செய்ததைப் போல ஒரு வெட்டிப் பேச்சு தான்
இந்த சுதந்திர தினத்திலிருந்து எல்லோரும் சபதம் எடுப்போம்....
" திரள் நிதி திருடன் " சீமான் கட்சியை 4% விழுக்காட்டிலிருந்து ... 0.0000% விழுக்காடுக்கு கொண்டுவருவோம் ...
லஞ்ச லாவண்யத்தைக் கண்டும் காணாமலும் ஒரு முதலமைச்சர் ஆட்சி செய்யமுடியுமா? முயலுவது தெரிகிறது! வாழ்த்துக்கள்!
₹5,932.23 கோடி — ஐந்தாயிரத்து தொனுனுற்றி முப்பத்திரண்டு புள்ளி இருபத்து மூன்று கோடி...இதுதான் மாற்றம் ...எண்ணிக்கையை எழுத்து கூட்டி படிக்க கூட தெரியாது ....இவனுங்கதான் லஞ்சத்தை ஒழிக்க கிளம்பிட்டாங்களாம் ...அடுத்தது தமிழை வளர்க்க கிளம்பிடுவானுங்க ...
அந்த மந்திரி பேசும் போது இப்படி பேசாதே , என சொல்லி தட்டிகேட்டுருந்தால் இவரை நம்பலாம் . சோளக்காட்டு பொம்மை போல எந்த உணர்ச்சியும் இல்லாமல்தானே இருந்தார் . அவனை இப்படி பேசு என உசுப்பிவிட்டதே இவராகத்தான் இருக்குமோ என சந்தேகம் வருது . லஞ்ச ஒழிப்பு என மக்களை ஏமாற்ற கூடாது .
₹5,932.23 கோடி — ஐந்தாயிரத்து தொனுனுற்றி முப்பத்திரண்டு புள்ளி இருபத்து மூன்று கோடி.......இதுதான் மாற்றம் ......இதுக்கு வோட்டு போட்ட வெட்கங்கெட்டவனுங்க ...
என்றாவது ஒருநாள் எதாவது ஒன்றை பேசிவிட்டு அமைதியாக இருந்துவிடுவது நல்லதல்ல .நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுபோய் கிடக்கிறது .மேலும் மேலும் கொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தவாறு இருக்கிறது .மக்களின் போராட்டங்கள் அதிகரித்துள்ளன .இது மிகவும் கவலைக்குள்ளான ஒன்று.