மாவட்ட அளவிலான செஸ் போட்டி
தேனி: தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி, ஜே.சி.ஐ., அலுமினி கிளப் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வனச்சரகர் அமானுல்லா முன்னிலை வகித்தார். அகாடமி தலைவர் சையது மைதீன் வரவேற்றார். பெரியகுளம் எம்.எல்.ஏ., சபரி ஐயங்கரன் பங்கேற்றார்.
8 வயது பிரிவில் ஆத்விக், ஹரிஹரயுகன், கீர்த்தீஸ், 10 வயது பிரிவில் சர்வதேவ், தரூஷ், ரிஷிநந்தனும், 12 வயது பிரிவில் கவின்யா, வருனிக்கா, கரிஷ், 15 வயது பிரிவில் தியாஸ்ரீ, சாத்விகா, சாய் சரவணன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தேனி கம்மவார் பப்ளிக் பள்ளி முதல்வர் பாலபிரேமா பரிசு வழங்கினார். போட்டிகளை தேசிய நடுவர் அஜ்மல்கான் நடத்தினார். ஜே.சி.ஐ., அலுமினி கிளப் தலைவர் ஜெயமணி, செயலாளர் நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குழந்தைகளுடன் கர்ப்பிணி தர்ணா விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
-
வி.சி.க., மாநாட்டிற்காக விடுமுறை: பா.ஜ., கண்டனம்
-
பால்குடம் ஊர்வலம்
-
வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்
-
மத்திய சிறையில் சுதந்திர தின விழா
-
விழுப்புரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவுரை
Advertisement
Advertisement