மத்திய சிறையில் சுதந்திர தின விழா
புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறையில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
சிறைத்துறை ஐ.ஜி., மோகன்குமார் தேசிய கொடியேற்றி வைத்து, சிறை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சிறை தலைமை கண்காணிப்பாளர் வெங்கடேசன் வாழ்த்தி பேசினார். நன்னடத்தை மூலம் விடுதலையான சிறைவாசிகளின் கலை நிகழ்ச்சிகளும், ஸ்ரீ ரஞ்சினி தேவி நாட்டியாலயாவின் குரு வினிதா பிரபுதேவா மாணவர்களின் பரதநாட்டியம், ஷா யோகா நாட்டிய மைய குரு சண்முககுமார் மாணவர்களின் யோகாசன சாதனை நிகழ்சியும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை சிறைத்துறை கண்காணிப்பாளரர் பாஸ்கரன் செய்திருந்தார். விழாவையொட்டி, சிறைவாசிகளுக்கு சிறப்பான உணவு வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: அரசுப் பணியாளர் தேர்வு ரத்து
-
இந்திய தேர்தல் நடைமுறைக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு
-
நிலுவை மனுக்களை ஒரு மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
-
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
-
லாட்டரி விற்றவர் கைது
-
அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி
Advertisement
Advertisement