விழுப்புரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவுரை
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அம்ரித் பாரத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
தெற்கு ரயில்வே பொது மேலாளராக புதியதாக நியமிக்கப்பட்ட சுப்பாராவ், நேற்று காலை சென்னையிலிருந்து சிறப்பு ரயிலில் வந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டார். அவர், காட்பாடி, திருவண்ணாமலை ரயில் நிலையங்களில் ஆய்வுப் பணியை முடித்துவிட்டு, மதியம் 2:00 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
அவர், விழுப்புரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், நடைமேடைகளில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பயணிகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், ரயில் நிலையத்தை சுகாதாரமாக வைத்திருக்குமாறும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ரூ.25 கோடி மதிப்பில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விழுப்புரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தார். புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரயில் நிலைய முகப்பு பகுதி மற்றும் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளில், புதிதாக மேற்கொள்ள வேண்டிய நகரும் படிக்கட்டுகளின் கட்டுமான பணி, கூடுதல் நடைமேடை அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, புதியதாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகம், குளிரூட்டும் வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருக்கும் அறைகளின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார். பின்னர் ரயில் நிலைய பிரதான நுழைவுவாயில் பகுதியில் நடந்து வரும் பணிகள், சாலைப்பணிகளை பார்வையிட்டதுடன் அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
நிலையத்தில், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி உள்ளதா என்பதையும் பார்வையிட்டார். மேலும், எந்தெந்த மார்க்கங்களில் இருந்து ,ரயில்கள் விழுப்புரம் வழியாக வந்து செல்கின்றன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ரயில் நிலையத்தில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
ஆய்வுப்பணியை முடித்துவிட்டு, மாலை 3:30 மணிக்கு, சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆய்வின்போது திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக்ராம்நெகி உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக பொது மேலாளர் சுப்பாராவுக்கு, ரயில்வே தொழிற் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.
லெவல் கிராசிங்கில் ஆய்வு: முன்னதாக, வேலுார் கண்டோன்மென்ட் மற்றும் திருவண்ணாமலைக்கு இடையில் அமைந்துள்ள லெவல் கிராசிங் கேட் எண்-59 மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம் இடையே அமைந்துள்ள லெவல் கிராசிங் கேட் எண் 54 ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். லெவல் கிராசிங்குகளில், தானியங்கி அமைப்பின் செயல்பாடு, பாதுகாப்பு நடைமுறைகளையும், பொது மேலாளர் ஆய்வு செய்துள்ளார்.
மேலும்
-
ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: அரசுப் பணியாளர் தேர்வு ரத்து
-
இந்திய தேர்தல் நடைமுறைக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு
-
நிலுவை மனுக்களை ஒரு மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
-
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
-
லாட்டரி விற்றவர் கைது
-
அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி