ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி,
வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய
பகுதிகளில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
பூவன்
வாழைத்தார், 300 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி
வாழைத்தார், 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement