ஓட்டல் உரிமையாளர் தற்கொலை
புதுச்சேரி: ஓட்டல் உரிமையாளர் தற்கொலை விவகாரம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி, திருமுடி நகரை சேர்ந்தவர் முகமது நிஜாம், 61; இவர் அண்ணா சாலையில் ஒட்டல் கடை நடத்தி வந்தார்.
அதில், நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த, 11ம் தேதி காலை முகமது நிஜாம் எலி பேஸ்ட் சாப்பிட்டு, அன்று மதியம் பழைய துறைமுகம் அருகில் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் 28 மாநில முதல்வர்களில் 14 பேர் மீது குற்றவழக்குகள்; முழு பட்டியல் இதோ!
-
2 நாட்களாக உயரும் தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு
-
கர்நாடகாவில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம்; நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
-
எதிர்க்கட்சித் தலைவர் தனது பதவியின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்; ராகுலுக்கு அறிவுறுத்தல்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
-
தொடர்ச்சியாக 30 மணி நேரம் வானில் பறக்கும் தாக்குதல் ட்ரோன்கள்; குத்தகைக்கு எடுக்கிறது இந்திய கடற்படை
Advertisement
Advertisement