விசிக மாநாட்டுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: விசிக மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் விடுதலை சிறுத்தைக் கட்சியின் மாநாடு இன்று நடை பெறுகிறது. மாநாடு மதியம் 2 மணிக்கு துவங்குகிறது. மதியம் 3.30 மணி முதல் 4.30 மணி வரை திருமாவளவன் உரையாற்றுகிறார்.
பிறகு மாநாடு நிறைவு பெறுகிறது. இதனால் உளூந்தூர்பேட்டையில் விசிகவின் மாநாடு நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களின் நலன், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜா அறிவித்துள்ளார்.
தற்போது மாணவர்கள் நலன் முக்கியம் எனக் கருதிவிடுமுறை அறிவித்தால், இது போல கட்சி மாநாடுகளை வார நாட்களில் நடத்த போலீஸ் அனுமதித்தது ஏன்? விடுமுறை நாட்களில் நடத்தலாமே; மாணவர்களின் படிப்பை கெடுத்து மாநாடு அவசியமா என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சிறப்பு வீடியோ!
கட்சி மாநாடுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; பெற்றோர் அதிருப்தி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வேஸ்ட்
வெரி bad
மாணவர்கள் நலன் காக்க வேண்டும் விடுமுறை நாட்களில் மாநாடு நடத்த அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்
தவறான முன்னுதாரணம் . ஒரு கட்சிக்கு பயந்து இந்த அறிவிப்பு. கட்சியின் லக்ஷணம் புரிகிறதா. கடைகளையும் மூடி இருப்பார்களே . ஓசியில் கேட்டு அடாவடி செய்வார்கள்
மாநாடு நேரத்தை மாற்றவேண்டும். பள்ளி விடுமுறை கூடாது.
நல்ல வேளை விடுமுறை விட்டாங்க இல்லை என்றால் பிள்ளைங்க கதி எனனவாகும். அண்ணன் ஓசி பிரியாணி முறைச்சு பார்த்தாலே முடிச்சி விட்ருவாரு.
இது எல்லா கட்சி களுக்கும் உண்டா? தவறுகள் தான்
தமிழ்நாட்டின் தலையெழுத்து இதுபோல ஜாதி கட்சிகள் மாநாட்டிற்கு விடுமுறை என்பது, டாஸ்மாக் வியாபாரம் அமோகம் தான் அங்கு.
பெண் குழந்தைகளின்/ மாணவியரின் கௌரவம் காக்கப்பட, வெட்டு.....கட்டு கும்பலிடம் இருந்து பெண்கள் தப்பிக்க, விடுமுறை அவசியமே....யாரும் தவறாக எண்ணாமல், இன்று ஒருநாள் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்களை வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு வெளியே அனுப்ப வேண்டாம்.....மேலும்
-
குழந்தைகளுடன் கர்ப்பிணி தர்ணா விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
-
வி.சி.க., மாநாட்டிற்காக விடுமுறை: பா.ஜ., கண்டனம்
-
பால்குடம் ஊர்வலம்
-
வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்
-
மத்திய சிறையில் சுதந்திர தின விழா
-
விழுப்புரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவுரை