ஊரக வளர்ச்சி துறை மாவட்ட பேரவை கூட்டம் 

கடலுார்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர் சங்க 5வது மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.  அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் சங்க கொடியேற்றினார். மாவட்ட துணைத் தலைவர் முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார்.மாநில செயலாளர் கென்னடி பூபாலராயன், துணைத் தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் ஆதவன், பொருளாளர் பத்மநாபன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அனைத்து ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பழனி நிறைவுரையாற்றினார்.  கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன், அரிகிருஷ்ணன், மருதவாணன், சுந்தரமூர்த்தி, யுவராஜ் வாழ்த்தி பேசினர். ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். 80 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 20 சதவீதம், 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Advertisement