முருக பக்தர்கள் மயில் காவடி
அழகர்கோவில், ஆக. 18 –
மதுரை சோலைமலை முருகன் கோயிலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் திருமுருகன் வார வழிபாடு சபை முருக பக்தர்கள் நேற்று மயில்காவடி எடுத்து வந்தனர்.
இலுப்பூரில் இருந்து புறப்பட்ட 108 முருக பக்தர்கள் மயில்காவடி ஏந்தி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மதுரை மாவட்டம் மேலுார், கிடாரிபட்டி வழியாக சோலைமலை முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். அவர்களை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் வரவேற்றார்.
கோயிலின் 4 பிரகாரங்களிலும் மேளதாளம் முழங்க காவடியுடன் ஆடிப்பாடி வந்த பக்தர்கள் மூலவர் சன்னதியில் தரிசனம் செய்தனர். முன்னதாக சுவாமிக்கு ஆபரணங்கள் சாத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. சஷ்டி மண்டபத்தில் உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், ஜவ்வாது, இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 36 வகை அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை இலுப்பூர் வழிபாடு சபை தலைவர் பொன்.முத்து விநாயகம், பொருளாளர் சேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு