பாஜவுக்கு புது நிர்வாகிகள் நியமனம்: ஸ்மிருதி இரானி, வசுந்தரா ராஜேவுக்கு முக்கிய பதவி
புதுடில்லி: பாஜவில் அமைப்பு ரீதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணைத்தலைவர்கள், அமைப்பு பொதுச்செயலாளர், தேசிய பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் நிதின் நபின் பாஜ தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அக்கட்சிக்கு புது நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துணைத்தலைவர்களாக 13 பேரும், தேசிய பொதுச்செயலாளர்களாக 8 பேரும், தேசிய செயலாளர்களாக16 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களில் ஆறு பேர் துணைத்தலைவர் ஆகவும், நான்கு பேர் செயலாளர்களாகவும், ஒருவர் பொது செயலாளர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் முஸ்லிம்கள் இரண்டு பேருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களின் விவரம் வருமாறு:
துணைத் தலைவர்கள்
வசுந்தர ராஜே சந்தியா (ராஜஸ்தான்)
திரத் சிங் ராவத் ( உத்தராகாண்ட்)
ராம் மாதவ்( டில்லி)
பைஜெயந்த் ஜெய் பாண்டா( ஒடிசா)
புரந்தேஸ்வரி( ஆந்திரா)
ரேகா வர்மா( உபி)
வர்ஷாபென் நரேந்திரபாய் தோசாய்( குஜராத்)
பார்தி பிரவின் பவார்( மஹாராஷ்டிரா)
சர்தர் மன்பிரீத் சிங் பாதல்( பஞ்சாப்)
லால் சிங் ஆர்யா( மபி)
நாகராஜா(கர்நாடகா)
தாரிக் மன்சூர்( உபி)
மதுசந்திரா கர்( மேற்கு வங்கம்)
தேசிய அமைப்பு பொதுச் செயலாளர்
பி.எல் சந்தோஷ்( டில்லி)
தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர்கள்
சிவப்பிரகாஷ்( மும்பை)
சவுதன் சிங்( சண்டிகர்)
தேசிய பொதுச்செயலாளர்
வினோத் தாவ்தே( மஹாராஷ்டிரா)
சுனில் பன்சால்( டில்லி)
பிப்லப் குமார் தேப்( திரிபுரா)
ஸ்மிருதி இரானி( உபி)
சந்தோஷ் பூனியா( ராஜஸ்தான்)
கஜேந்திர படேல்( மபி)
ஹரிஸ் திவேதி( உபி)
சஞ்சய் பாட்டியா( ஹரியானா)
தேசிய செயலாளர்கள்
கவிதா பட்டிதர்( மபி)
சுரேந்திரன்( கேரளம்)
போலா சிங்( உபி)
பிரதீப் வர்மா( ஜார்க்கண்ட்)
ஜக்தீஷ் ஐஸ்வர்பாய் படேல்( குஜராத்)
சந்தீப் பதக்( டில்லி)
பங்னோன் கோன்யாக் ( நாகாலாந்து)
சங்கீதா யாதவ்( உபி)
அனில்அந்தோணி( கேரளம்)
வெங்கடேசன்( தமிழகம்)
மனோஜ் திக்கா( மேற்கு வங்கம்)
சித்தார்த் ஷம்பு( பீஹார்)
ஸ்வதேஷ் சிங்( டில்லி)
மரிகாங்கோ தியோ பர்மன்( அசாம்)
ரோகன் குப்தா( குஜராத்)
ஜெய்பிரகாஷ்( டில்லி)
தேசிய பொருளாளர்
பியூஷ் கோயல்(மஹாராஷ்டிரா)
தேசிய இணை பொருளாளர்
ராஜேஷ்ம மங்கல்( ராஜஸ்தான்)
தேசிய அலுவலக பொறுப்பாளர்
தருண் சுக்( பஞ்சாப்)
தேசிய அலுவலக செயலாளர்: மகேந்திர பாண்டே
வட கிழக்கு ஒருங்கிணைப்பாளர்: சம்பித் பத்ரா( ஒடிசா)
வடகிழக்கு இணை ஒருங்கிணைப்பாளர்: ராஜிவ் பாபர்( டில்லி)
அனைத்து அணிகளின் ஒருங்கிணைப்பாளர்: விஷ்ணு தத் சர்மா( மபி)
அனைத்து அணிகளின் இணை ஒருங்கிணைப்பாளர்கள்
ரிதுராஜ் சின்ஹா( பீஹார்)
விஷ்ணுவர்தன் ரெட்டி( ஆந்திரா)
இளைஞர் அணி தலைவர்- ஹேமங் ஜோஷி (குஜராத்)
மகளிர் அணி தலைவி-ரூப் குமாரி சவுத்ரி( சத்தீஸ்கர்)
ஓபிசி அணி தலைவர்-அமர்பால் மவுரியா( உபி)
விவசாயிகள் அணி தலைவர்- பன்சிலார் குர்ஜார்( மபி)
எஸ்சி அணி தலைவர்- ஷிவேஷ் குமார் ராம்( பீஹார்)
எஸ்டி அணி தலைவர்- மன்னாலால் ராவத்( ராஜஸ்தான்)
சிறுபான்மையினர் அணி தலைவர்- குன்வர் பஷீத் அலி( உபி)
மீடியா கன்வீனர்
அனில் பவுலானி( உத்தரகாண்ட்)
மீடியா துணை கன்வீனர்கள்
ஆஷிஷ் உஷா அகர்வால் ( மபி)
பிரதீப் பந்தாரி( டில்லி)
சித்தார்த் யாதவ்( டில்லி)
சமூக ஊடக கன்வீனர்
தீபக் மாஷ்கே- சத்தீஸ்கர்
சமூக ஊடக துணை கன்வீனர்கள்
பிரீதி காந்தி( மஹாராஷ்டிரா)
ஷிவானந்த் திவேதி ( டில்லி)
அலோக் பட்டி( உத்தரகாண்ட்)
அருண் யாதவ்( ஹரியானா)
பாஜ தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் இருந்தார். இப்போது அவருக்கு பதிலாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் வாழ்த்து
பாஜ புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை:
பாஜவின் புதிய நிர்வாகிகளுக்கும், புதிதாக பொறுப்பு அளிக்கப்பட்டவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக நியமனம் செய்யப்பட்ட குழுவினர், அமைப்பு ரீதியில் உள்ள அனுபவம், உற்சாகம் மற்றும் அடிமட்ட தொடர்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும். கட்சியை பலப்படுத்துவதிலும் பொது மக்கள் சேவையிலும் அவர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் னெ்ற நம்பிக்கை உள்ளது.அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பிஜேபி யை அழித்த பெருமைமிகு மூவரில் இந்த வானதி மிக முக்கியமானவர்.
பாவம் பெர்த்தில் இருந்து வேறு யாருக்காகவோ கூவுகிறார். எப்படி கூவினாலும் சரி. நீங்க நெனக்கிறது இனி ஒண்ணும் ஆகப் போறதில்ல.
வானதி அடுத்த தமிழக பாஜக தலைவராகக்கூடும்.
வானதி ஸ்ரீனிவாசன் நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
வானதி சீனிவாசன் போன்றவர்கள் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி கட்சிக்குப் பிறகுதான் பதவி என தொடர்ந்து கட்சிக்காக உண்மையாகப் பணியாற்றுவார்கள். வெளியேறிய சிலரைப் போல இருந்தால் தலைவராகத்தான் இருப்பேன் என முரண்டு எல்லாம் பிடிக்க மாட்டார்கள்.
முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ சோபிக்காமல் போனால் கட்சியில் முக்கியப் பதவி ....
தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் எவருக்கும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாஜகவின் மத்தியச் செயலகத்தில் உயரிய பொறுப்புடன் கூடிய வாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்பது மிகுந்த ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
கட்சியை வளர்க்காமல் தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டவர்களுக்குப் பதவி ஒரு கேடா >>
ஒரு ஜான் வேலை செய்து ஒன்றரை மீட்டர் கூலியை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் வரும்....!!!
அக்கா வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு ஏதோ ஒரு மாநிலத்தில் கவர்னர் பதவி நிச்சயம்.
தேசிய மகளீர் அணி தலைவர் என்பவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்த்து அனைத்து மாநில மக்களிடம் எளிதில் அனுகக்கூடியவராக இருக்க வேண்டும் ஆனால் இவர் கோயமுத்தூரை தாண்டி அடியெடுத்து வைக்க மாட்டேன்கிறார் இவருக்கு கவர்னர் பதவியா ??? டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலக மேலாளர் பதவி கூட கிடைக்காது....!!!
கோபாலகிருஷ்ணன் அவர்களே .... நீங்கள் அவரது முகநூல் பக்கத்தைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் .... உபி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் வந்தபொழுது பிரச்சாரத்தில் கலந்துகொண்டுள்ளார் ....
அப்படியே தேர்தல் பிரச்சாரம் பண்ணி கிழிச்சட்டாங்கோ