லஞ்சத்துக்கு எதிராக டில்லி மாணவர் உருவாக்கிய இணையதளம்: மக்களிடம் அமோக வரவேற்பு
புதுடில்லி: லஞ்சத்தால் பாதிக்கப்படுவோர், பொதுவெளியில் புகார் அளிக்க பிரத்யேக இணையதளம் தொடங்கியுள்ளார், 20 வயது டில்லி மாணவர் ஆர்யன் நிஷாத். Bribes.fyi என்ற அந்த இணையதளத்தில், உங்கள் பெயர் குறிப்பிடாமலேயே புகார் பதியலாம்.
நாடு முழுதும் லஞ்சக் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் தினமும் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டில் அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனாலும், லஞ்சம் தொடர்பான புகார்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.
இந்நிலையில் டில்லியை சேர்ந்த பி.டெக்., மாணவரான ஆர்யன் நிஷாத் என்பவர் Bribes.Fyi என்ற இணையதளத்தை கடந்த ஜூலை2 ம் தேதி துவங்கி உள்ளார். இலவச இணையதளமான அதில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்பட்ட சம்பவங்கள், பணம் கொடுத்தது மற்றும் மறுத்தது குறித்தது பகிர்ந்து கொள்ளலாம் எனத் தெரிவித்து இருந்தார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், புகார் சொல்பவர் தன்னை பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான். அதாவது, நடந்த சம்பவத்தைப் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதும்.
இந்த இணையதளத்தில் லஞ்சம் கேட்கப்படும் துறை, நகரங்கள் மற்றும் மாநிலங்கள் வாரியாக லஞ்ச குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய முடியும். லஞ்சம் கொடுப்பது தொடர்பான தகவல்களை பதிவு செய்ய ஒரு நிமிடத்தில் முடிந்துவிடும்.
இந்த இணையதளத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தளத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி நிலவரப்படி 258 நகரங்களில் இருந்து 646 முறை லஞ்சம் குறித்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தவர்களில் 37 சதவீதம் பேர் பணம் கொடுக்க மறுத்தபோதிலும், தங்களது வேலையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
காவல்துறை மீது அதிகபட்சமாக 337 பேரும்
ஆர்டிஓ மீது 88 பேரும்
வருவாய் மற்றும் நில ஆவணங்கள் துறை மீது 69 பேரும்
பாஸ்போர்ட் அலுவலகங்களில் 43 பேரும்
மாநகராட்சி அலுவலகங்கள் மீது 29 பேரும் லஞ்சம் குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.
லஞ்சத்தால் பாதிக்கப்படுவோர், அது பற்றி வெளிப்படையாக போலீசில் புகார் அளிப்பதே சிறந்த வழிமுறை.வெவ்வேறு காரணங்களால், வெளிப்படையாக தங்கள் பிரச்னை பற்றி சொல்ல முன் வராதவர்கள், இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
அவர்களது பதிவுகள், லஞ்சம் கேட்பவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். லஞ்சத்தை கண்டறிந்து ஒழிக்க முயற்சிக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிப்பதாகவும் இருக்கும்
A VERY GOOD INITIATIVE. இதனால் லஞ்சம் முழுவதும் ஒழியாவிட்டாலும் கடிவாளம் போடப்படும்.
நல்ல ஆரம்பம்.இதற்கு முன்பு கொடுதவர்கள்கூட பதிவு செய்தால் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க உதவும்.தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையும்,லோக் ஆயுக்தாவும் இதை செய்திருக்கவேண்டும் .தமிழ்நாட்டில் கட்சி நிதிக்கு லஞ்சமும் எல்லாம் இதில்சென்று பதிவிடவெண்டும். தயங்கூடாது .குறைந்தபட்சம் எவ்வளவு கறுப்புப்பணம் இன்னும் உள்ளது அல்லது வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற ஒரு கணகீடாவது நமக்கு கிடைக்கும்.லஞ்சம் கொடுத்தவர்கள் இதில் சென்று பதிவு செய்வது நீங்கள் நாட்டிற்க்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்..மேலும்
-
கிராமங்களில் எம்.ஆர்.பி.,யை விட உர மூட்டைகள கூடுதல் விலை: தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கவனிப்பார்களா?
-
குழந்தைகளுடன் கர்ப்பிணி தர்ணா விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
-
வி.சி.க., மாநாட்டிற்காக விடுமுறை: பா.ஜ., கண்டனம்
-
பால்குடம் ஊர்வலம்
-
வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்
-
மத்திய சிறையில் சுதந்திர தின விழா