லாட்டரி விற்றவர் கைது

கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டி எஸ்.ஐ., மும்தாஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அகரம் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு ஸ்கூட்டருடன் நின்றிருந்த, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மூக்கனுாரை சேர்ந்த கோபால், 57, என்பவர் தடை செய்யப்பட்ட லாட்-டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்தார். போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடமி-ருந்து லாட்டரி டிக்கெட்டுகள், 12,500 ரூபாய், ஜூபிடர் ஸ்கூட்டர் மற்றும் மொபைலை பறி-முதல் செய்தனர்.

Advertisement