பல மாதங்களாக முடங்கிய ரோடு பணி

வடமதுரை: மோர்பட்டி ஜி.குரும்பபட்டியில் இருந்து பெருமாள்நாயக்கனுார் செல்லும் தார் ரோடு பணி துவங்கிய நிலையிலேயே பல மாதங்களாக முடங்கி உள்ளது.

தேர்தல் அறிவிப்பிற்கு சில மாதங்களுக்கு முன் வடமதுரை ஒன்றியத்தில் பல இடங்களில் தார் ரோடு புதுப்பித்தலுக்கு டெண்டர் விடப்பட்டன. தேர்தல் அறிவிப்பிற்கு முன் பணி துவங்காவிடின் செய்ய முடியாது என்பதால் அனைத்து பகுதியிலும் ஒப்பந்ததாரர்கள் ரோடுகளை பெயர்த்தனர். பெரும்பாலான ரோடுகளில் பணி துவக்கி விட்டு தற்போது பணிகள் முடங்கி விட்டன.

இந்த ரோடுகளை பயன்படுத்தும் மக்கள் சிரமப்படும் நிலை தொடர்கிறது. தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் பல இடங்களில் ஒவ்வொன்றாக ரோடுகள் பணிகள் முடிந்து வருகிறது.

அதே நேரம் மோர்பட்டி ஊராட்சி ஜி.குரும்பபட்டியில் இருந்து பெருமாள்நாயக்கனுார் ரோட்டில் ஏற்கனவே இருந்த ரோட்டில் கற்களை பெயர்த்துவிட்ட நிலையில் 6 மாதங்களாக பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. இவ்வழியை பயன்படுத்தும் மக்கள் அதிக சிரமங்களை சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு காண அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement