சுதந்திர தின விழா
கள்ளக்குறிச்சி: கனியாமூர் டி.எஸ்.எம். கல்வியியல் கல்லுாரியில் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி தாளாளர் மனோகர் குமார் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி துணை முதல்வர் ராமு வர வேற்றார். முதல்வர் மகாலட்சுமி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியை தேவி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement