பாரதிய மஸ்துார் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார்.

மாநிலத் தலைவர் வெங்கட்ராகவன், 'தொழிலாளருக்கு எதிரான சட்டத் தொகுப்புகளில் திருத்தம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஓய்வுத்தொகை ரூ.7,500 வழங்க வேண்டும். அகவிலைப்படி ஓய்வூதியர்களை ஆயுஷ்மான் பாரத் மருத்துவத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். செயலாளர் தவமணி, கைத்தறி பேரவை மாநில பொதுச் செயலாளர் பாபுலால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement