தலைமை செயலகத்தில் முதல்வர் அறை மாற்றம் ஏன்; சட்டசபையில் திமுக, தவெக காரசார விவாதம்
சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் அறை இடமாற்றம் செய்யப்படுவது தொடர்பாக, சட்டசபையில் இன்று திமுக மற்றும் தவெக இடையே காரசாரமான விவாதம் நடந்தது.
அதன் விபரம் பின்வருமாறு:
திமுக எம்எல்ஏ எவ வேலு: முதல்வர் விஜயின் புதிய அறையின் பணிகள் முடிந்தபிறகு, ஆன்லைனில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது; முதல்வர் அறை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?
அமைச்சர் ஆதவ்: வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி மக்களுக்கு கொடுப்பது போல் எ.வ.வேலு பேச்சு உள்ளது; கடந்த 5 ஆண்டுகால பத்திரிக்கை செய்தியை எடுத்துக் காட்டினால் நிலை என்ன? பத்திரிகைச் செய்தி தவறானது, டெண்டர் இன்னும் முடியவில்லை.
முதல்வர் விஜய் தனது வசதிக்காக இல்லாமல், தன்னை சுற்றியுள்ள அதிகாரிகளுக்கு ஒரு நல்ல வசதியான இடம் வேண்டும் என்பதற்காக தான் தன்னுடைய அலுவலகத்தை மாற்றுகிறார். இது ஒரு தற்காலிக இடமாற்றம். முதல்வர் விஜயின் தனி செயலாளர்கள் வெறும் 100 சதுர அடி கூட இல்லாத குறைந்த அளவிலான இடத்தில் பணி புரிகின்றனர்.
சரியான கழிப்பறை வசதி கூட இல்லை. நீங்கள் வந்து பார்க்கலாம். புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என கருணாநிதியும், ஜெயலலிதாவும் நினைத்தார்கள்; காலையில் இருந்து மாலை வரை அரசு அதிகாரிகளையும், வெளிநாட்டு பிரதிநிதிகளையும் முதல்வர் விஜய் சந்தித்து வருகிறார்.
அனைவரையும் சந்திக்க வேண்டும் என்பதால் அறையை மாற்றுகிறார்கள். பிரசாரத்தின் போது சாதாரணக் கடைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு விட்டு பிரசார வாகனத்திலேயே இரண்டு மணி நேரம் ஓய்வெடுக்கக் கூடிய எளிய முதல்வரை பற்றி தவறான தகவலை அவையில் தெரிவிக்க வேண்டாம்.
வெள்ளை அறிக்கை
கூடிய விரைவில் நெடுஞ்சாலைத்துறையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்; கடந்த 60 நாட்களில் 20 திட்டங்களுக்கு மேல் மீண்டும் புதிய டெண்டர் அறிவித்தோம்; கடந்த ஆட்சியை விட 20லிருந்து 36% வரை மதிப்பு குறைவாக டெண்டர்கள் வெளியாகி வருகின்றன இவ்வாறு அமைச்சர் ஆதவ் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
முதல்வர் அறை டெண்டரில் முறைகேடா? திமுக கேள்விக்கு அமைச்சர் ஆதவ் ஆவேச பதில்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
முதல்வர் அறையை மாற்றினால் என்ன மாற்றாவிட்டால் என்ன ? திமுகவிற்கு ஏன் வலிக்கிறது ? தங்கள் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டி, அதில் திமுக தலைவரின் பெயரை மட்டுமே போட வேண்டும் என்பது திமுகவினரின் நினைப்பு. அவரச கோலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைத்தது போல செய்ய வேண்டும். இன்று ஒரு தண்ணீர் தொட்டி சென்னையின் நடுவில் உள்ளது பாருங்கள். ஜெயலலிதாவால் தலைமைச் செயலகம் கட்டப்படக் கூடாது என்று எத்தனை தொந்தரவு செய்தார்கள் ? இவர்களைப் போல உலகத்தில் நாடகமாடும் கட்சியினரைக் காண வேறு எங்கும் காண முடியாது.
இன்று சட்டசபை தொடங்கியதும் யார் ஈவேராவுக்கு அதிகளவு முட்டுக்கொடுக்கிறோம் என்பதில் திமுக தவெக கடும் வாக்குவாதம் நடைபெற்றது... விளங்கிடும்.
கணினி AI காலத்தில் இவ்வளவு பெரிய செயலகமும் இவ்வளவு தெண்டச்சோறு அதிகாரிகளும் எதற்கு? எளிய காமராஜரும், வசதியான பெரிய வக்கீலாக இருந்த ராஜாஜியும் MGR, ஜெயா, முதியவர் கருணாநிதியும் கூட இதே அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றவில்லையா? சுற்றி வளைக்காமல் வாஸ்துப்படி மாற்றப்படுகிறது என உண்மையைக் கூறிவிடலாமே.
வேலு அவர்களே நீங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்து மூட்டை மூட்டையாக வைத்துள்ளீர்களே எதற்காக.
124 ஏக்கர் நிலத்தில் உங்கள் சகோதரர் நிறுவனம் இடம் எப்படி வந்தது
தற்காலிக இடமாற்றம் தான்....
தற்காலிக இடமாற்றத்திற்கு 11 கோடி செலவு செய்யும் முதல்வா்....
லாட்டரி தான் எல்லா கேள்விகளுக்கும் எழுந்து பதில் ....அவர் முதல் போட்ட முதலாளி .....போட்ட முதல் என்னாகுமோன்னு பதட்டம் இருக்கத்தான் செய்யும் ...
சீரழிந்த தமிழ் நாடு ....மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 10 நாள்களில் 8 கொலைகள், கோவை மாவட்டத்தில் 11 நாள்களில் 4 படுகொலைகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவற்றில் பெரும்பான்மையான கொலைகளின் பின்னணி போதைப்பொருள் புழக்கம் மற்றும் பயன்பாடு...4 வயது பெண் குழந்தை முதல் 85 வயது பாட்டி வரை பாலியல் கொடுமை ....படு கேவலமான சட்டம் ஒழுங்கு ..
இந்த சபாநாயகர் அவை குறிப்பிலிருந்து நீக்கம் நீக்கம் என்று தினமும் சொல்கிறார் ...தினம் தினம் பேசி வைத்துக்கொண்டு பேசுவது ....அது ஒளி பரப்பு ஆகுது ....எல்லாம் பேசி முடித்து மொத்தமும் ஒளிபரப்பு ஆகி அனைவரும் பார்த்த பிறகு இந்த சபாநாயர் நடு நிலை நாயகர் போல நீக்கம் என்று அறிவிப்பார் ....மேலும்
-
நாளைய மின் தடையில் சேர்ப்பு... 20ம் தேதி
-
வாய்க்கால் அடைப்புகளை அகற்றும் பணி துவக்கம்
-
ஓம்முருகா குரூப்ஸ் நிறுவனர் நினைவு தினம் அனுசரிப்பு
-
உயர்கோபுர மின்விளக்கு சரிபார்ப்பு தினமலர் செய்தி எதிரொலி
-
திண்டுக்கல் திருச்சி இடையே ரயில் பாதையில் பாதுகாப்பு வேலி
-
ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு தினந்தோறும் நடக்கிறது தகராறு