ஓம்முருகா குரூப்ஸ் நிறுவனர் நினைவு தினம் அனுசரிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஓம்முருகா குரூப்ஸ் நிறுவனர் தேவநாதன் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதையொட்டி, சாமியார் மடம் பகுதியில் உள்ள ஓம் முருகா டிராக்டர்ஸ் நிறுவனம் மற்றும் ஏ.கே.டி., பள்ளி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தேவநாதனின் படத்தை, அவரது தந்தை ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் வீரமணி – தாய் புனிதா, மனைவி மகேஸ்வரி, மகள் சீதாலட்சுமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, மலையரசன் எம்.பி., மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், படத்திற்கு மலர் துாவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின், 5,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.

மேலும், ஓம் முருகா தேவா நினைவு அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

Advertisement