பாரத்நெட் பங்கீட்டாளர்கள் தேர்வு: விண்ணப்ப பதிவு தொடக்கம்
கோவை: பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவை வழங்க, மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் வேலையை தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் செய்து வருகிறது.
விண்ணப்பதாரர்களின் கடந்த மூன்று நிதியாண்டுகளின், சராசரி ஆண்டு வருவாய் ரூ.50 லட்சம் என்பதிலிருந்து ரூ.20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாரத்நெட் பணிகள் 96 சதவீதம் முடிந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ரூ.2 லட்சம் பாதுகாப்பு வைப்பு செலுத்திய பின், பணி ஆணை வழங்கப்படும். விண்ணப்பப் பதிவு பைபர்நெட் கார்ப்பரேஷன் இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள், அதே வருவாய் உட்கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
மேலும்
-
நாளைய மின் தடையில் சேர்ப்பு... 20ம் தேதி
-
வாய்க்கால் அடைப்புகளை அகற்றும் பணி துவக்கம்
-
ஓம்முருகா குரூப்ஸ் நிறுவனர் நினைவு தினம் அனுசரிப்பு
-
உயர்கோபுர மின்விளக்கு சரிபார்ப்பு தினமலர் செய்தி எதிரொலி
-
திண்டுக்கல் திருச்சி இடையே ரயில் பாதையில் பாதுகாப்பு வேலி
-
ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு தினந்தோறும் நடக்கிறது தகராறு