3 சவரன் செயின் திருட்டு

அவலுார்பேட்டை: பெண்ணிடமிருந்து செயின் திருடு போனது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி தாலுகா கொட்டாவெளி கிராமத்தை சேர்ந்த பூவராகன் மனைவி குலவாசி, 49; இவர், கடந்த, 12 ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றார்.அப்போது கூட்ட நெரிசலில் இவரது கழுத்திலிருந்த 3 சவரன் செயினை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement