தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேர் பலியான சோகம்

பாங்குய்: மத்திய ஆப்ரிக்க குடியரசில் தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்த விபத்தில், அதில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 30 பேர் உயிரிழந்தனர்.

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள நனா-மாம்பேரே மாகாணத்தில் உள்ள ஹப்பா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு, உள்ளூர் மக்களின் உதவியுடன், 30 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், இதுபோன்ற சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement