மஹிந்திரா 'பிளாசோ ஐ ட்ரக்' நாட்டின் முதல் ஏ.ஐ., டிரக், 28 முதல் 55 டன் வரை

'மஹிந்திரா டிரக் அண்ட் பஸ்' நிறுவனம், 'பிளாசோ ஐ ட்ரக்' என்ற கனரக லாரியை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இது, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இயங்கும் நாட்டின் முதல் லாரி என இந்நிறுவனம் கூறுகிறது. இதை, சரக்கு போக்குவரத்து, சுரங்க, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த முடியும். இந்நிறுவனம், 28 டன் முதல் 55 டன் வரையிலான டிப்பர், டிராக்டர் டிரைலர், சரக்கு லாரிகளை உற்பத்தி செய்கிறது.

இந்த லாரியில் ஏற்கனவே உள்ள 7.2 லிட்டர், 6 - சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது, 320 ஹெச்.பி., பவரையும், 1,100 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜினுடன் 9 - ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

'லைட், ஹெவி மற்றும் டர்போ' என மூன்று ரைட் மோடுகள் இதில் உள்ளன. சாலை, சரக்கு எடை மற்றும் ஓட்டுனர் விபரங்களை ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆராய்ந்து, எரிபொருள் செலவை குறைக்க எந்த மோட் சரியானது என்பதை கண்டறிந்து, லாரியை இயக்க உதவுகிறது. அதேபோல் இதில், ஆட்டோ ஸ்டாப் வசதியும் கிடைப்பதால், எரிபொருள் செலவு 10 சதவீதம் வரை குறைவதாக இந்நிறுவனம் கூறுகிறது.

லாரி யின் உட்புறத்தில் நல்ல இடவசதி, டிரைவர்கள் ஓய்வு எடுக்க ஸ்லீப்பர் ஏ.சி., கேபின், சவுண்ட் சிஸ்டம், யூ.எஸ்.பி., சார்ஜிங் போர்ட், க்ரூஸ் கன்ட்ரோல், ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங், சஸ்பென்ஷன் சீட்கள், ஏர் பிரேக், 430 எம்.எம்., ஹெவி டியூட்டி கிளட்ச், 6 ஆண்டு அல்லது 6 லட்சம் கி.மீ., வரை உத்தரவாதம் என பல அம்சங்கள் கிடைக்கின்றன.

லாரி பராமரிப்பு 48 மணி நேரத்திற்குள் முடியவில்லை என்றால், லாரியை திரும்ப பெறும் வரை ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் வழங்குவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகன உரிமையாளர்கள், வாகன செயல்பாட்டை நேரடியாக உடனுக்குடன் கண்காணிக்க ஐ - மேக்ஸ் 2.0 என்ற செயலியை, இந்நிறுவனம் நவீனப்படுத்தி உள்ளது.

@block_B@ எதிர்பார்ப்பு விலை: ரூ. 28 முதல் ரூ. 54 லட்சம்block_B

Advertisement